in

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கணி பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளது அதனால் இந்த மலை சிக்கந்தர் மலை என்று தான் காலாகாலமாக அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கணி பேட்டி

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்துவது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று திருப்பரங்குன்றம் வந்த வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி மலை மேல் உள்ள தர்காவிற்கு செல்லும் பாதையை ஆய்வு செய்தார். தொடர்ந்து மலை மீது உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான தடை குறித்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரனிடம் உணவு எடுத்து செல்வதற்கான தடை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல் ஆய்வாளர் மாவட்ட நிர்வாகம் தான் தங்களுக்கு இந்த அறிவிப்பை கொடுத்துள்ளதாகவும் அதற்கு மேல் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் கனி எம்பி கூறுகையில்:

திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா உள்ளது அதனால் இந்த மலை சிக்கந்தர் மலை என்று தான் காலாகாலமாக அழைக்கப்படுகிறது. இந்த மலைக்குப் பின்புறம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த தர்காவிற்கு இஸ்லாமியர் அல்லாதவர்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். நேத்திக்கடனை செலுத்துவதற்காக ஆடு, கோழிகள் அறுத்து சமைத்து மற்றவர்களுக்கும் உணவு வழங்குவது ஆண்டாண்டு காலமாக பழக்கத்தில் இருக்கிறது.

தற்போது அங்கே செல்பவர்கள் உணவுப் பொருள்கள், ஆடுகளை கொண்டு சென்று பலியிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசினேன் அதற்கு உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். ஆண்டாண்டு காலமாக இங்கே எப்படி வழிமுறை பின்பற்று வந்ததோ.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இங்கே தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள் எனவே இந்த நிலையில் காவல்துறை இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை இல்லை எதற்காக இந்த கட்டுப்பாடுகளை விதித்து வரக்கூடியவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை பேசி, தேவைப்பட்டால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த விவகாரத்தில் ஆண்டு ஆண்டு காலமாக செய்து வரும் வழிபாட்டு முறைகள் தொடர்வதற்கான நடவடிக்கைகளை வக்பு வாரியத்தின் சார்பாக எடுப்போம். இங்கே உள்ள தர்காவும், பள்ளியும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த வகையில் இங்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அனைவரும் ஒற்றுமையாக வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்வோம்.

ஏற்கனவே இந்த நடைமுறை இருந்ததா என்ற கேள்விக்கு:

ஏற்கனவே இந்த நடைமுறைகள் எல்லாம் இருந்ததா இல்லையா என்பதை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் விசாரிக்க முடியும். மலை மீது ஆடு, கோழி எடுத்த சென்று சமைத்து சாப்பிட்டார்களா என விசாரித்து நடைமுறையை அனுமதித்தால் போதும்.

மாவட்ட நிர்வாகம் என்ன சொல்கிறது என்ற கேள்விக்கு:

பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். காவல்துறை மாவட்ட நிர்வாகம் பேசி உடனடியாக தீர்வு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு:

அரசை அணுகி இந்த நடைமுறையை பெற முடியும் என்று சொல்கிறோம் அதை வரக்கூடிய நாட்களில் அனுமதி பெறுவோம் என கூறினார்.

What do you think?

அருள்மிகு காலபைரவர் சுவாமிக்கு, தேய்பிறை அஷ்டமி பூஜை, அர்ச்சனை அலங்கார சிறப்பு வழிபாடு!!!

கொள்ளார் ஸ்ரீ சக்திமிகு பால விநாயகர் ஆலய அஷ்டபந்தனம் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.