டெல்டா காப் பைக் பேட்ரோல் அறிமுகம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்கவும், குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்திடவும் ஐந்து இருசக்கர வாகனங்களை ஒதுக்கி அதற்கு 24 மணி நேரமும் தொடர் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை பகுதிகளில் கண்காணிப்பு செய்திட முதன்முறையாக டெல்டா காப் பைக் பேட்ரோல் அறிமுகம், விழா மகாமக குளம் மேல் கரையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்அப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கும்பகோணம் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.