in ,

IPL போட்டி பெங்களூரு – லக்னோ இன்று மோதல்


Watch – YouTube Click

IPL போட்டி பெங்களூரு – லக்னோ இன்று மோதல்

 

இந்தியன் பிரீமியல் லீக் (ஐபிஎல்) 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியுடன் தற்போது ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் ரன் மழையை பொழியலாம். இந்த மைதானத்தில் கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது. வேகப்பந்து வீச்ச்சாளர்கள் தொடக்கத்தில் அதிக ஸ்விங்களை செய்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கலாம். இன்றைய போட்டியில், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.

மைதானத்தில் இதுவரை மொத்தம் 90 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 37 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இங்குள்ள அணிகள் இலக்கை துரத்தவே அதிகம் விரும்புகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீசலாம். சின்னசாமி மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்கள்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானது. அதன்பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 4 போட்டிகலில் விளையாடியுள்ளது. இதில், அதிகபட்சமாக பெங்களூரு அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் லக்னோ ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இந்தநிலையில், சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி, லக்னோ அணியை வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

பெங்களூருவில் மாலை நேரத்தில் வெப்பம் இருக்கும், போட்டியின் தொடக்கத்தில் வெப்பநிலை 30-32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பே இல்லை.


Watch – YouTube Click

What do you think?

தாய்லாந்தில்… மஜா ..பண்ணும் வரலட்சுமி, நிக்கேலாய்

பிரச்சாரக் கூட்டத்திலேயே பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்கள்