உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1039 ம் ஆண்டு சதய விழாவையொட்டி பெரிய கோயிலில் 700 கலைஞர்கள் பங்கேற்ற “இராஜராஜ சோழன் விஜயம்” என்கிற நாட்டிய நிகழ்ச்சி இன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது:
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1039ம் ஆண்டு சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் துவங்கியது தொடர்ந்து தேவாரம், , திருவாசகம் இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், கவியரங்கம் என தொடர்ந்து நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வாக
மாநிலம் முழுவதிலிருந்தும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 700 பரதக்கலைஞர்கள் பங்கேற்ற இராஜராஜ சோழன் விஜயம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது இன்று இரவு நடைபெற்றது..
நந்தி மண்டபத்தை சுற்றிலும் 700 நடன கலைஞர்கள் ஒரு சேர இராஜராஜ சோழனையும். பெருவுடையாரையும் போற்றி நடனம் ஆடி அசத்தினர்.
இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக இராஜராஜ சோழனை வரவேற்கும் விதமாக கொம்பு ஊதி பறை இசைக்க. மணி ஓசை ஒலிக்க பரதக்கலைஞர்கள் கைகளில் விளக்கு ஏந்தி நடனமாடியது கூடி இருந்த மக்களை பரவசப்படுத்தியது.
சதய விழாவில் பங்கேற்று 700 பேருடன் இணைந்து ஆடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக நடன கலைஞர்களும், விழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக பாகஇருந்தாக பொதுமக்களும் தெரிவித்தனர்
இரண்டு நாள் சதயவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் பெரிய கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று மாமன்னன் ராஜராஜ சோழனின் திருஉருவ சிலைக்கு தமிழக அரசு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும்
மாலையில் 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
தஞ்சையின் முக்கிய விழாவையொட்டி நகர் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.. தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது…