in

முசிறி தலைமையாசிரியர் கலந்தாய்வில் முறைகேடு – டிட்டோ ஜாக் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம்

முசிறி தலைமையாசிரியர் கலந்தாய்வில் முறைகேடு – டிட்டோ ஜாக் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டமன்றத்தில் ஆசிரியர் சங்கத்தினர் பணி மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) மதியழகன் வருகை தந்தார். அவரிடம் டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்கத்தினர் முசிறி, துறையூர், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மொத்தம் ஏழு தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்ததாகவும் இதில் முசிறி தாலுகாவில் உள்ள மேல கொட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடத்தை கலந்தாய்வில் காட்டாமல் கலந்தாய்வுக்கு முன்னதாக நிரப்பியது தவறு என கூறி முசிறி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை விசாரணை செய்து நியாயமான முறையில் கலந்தாய்வு நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பேட்டி:

சம்சுதீன், டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளர் – முசிறிநாகராஜ், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டிட்டோஜேக் – முசிறி
நீலகண்டன், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டிட்டோஜேக் – முசிறி

What do you think?

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

நாகையில் 6 ஒன்றியங்களில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்