குழந்தையின் கைவிரலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இர்ஃபான்
Youtubeரான இர்ஃபான் ரோட்டு கடை முதல் வெளிநாட்டில் இருக்கும் ஹோட்டல்கள் வரை விசிட் செய்து அங்கு இருக்கும் உணவுகளை ருசி பார்த்து ரிவ்யூ கொடுக்கும் விதத்தை பார்க்கும் பொழுது நாமே உணவை உண்பது போல் ஒரு நிறைவு ஏற்படும்.
இவர் யூடியூப் மற்றும் FACEBOOK மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் நிலையில் இவருக்கு சமீபத்தில் ஆலியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
அவருடைய மனைவி கன்சிவாக இருக்கும் பொழுது அவரின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று துபாய் சென்று தெரிந்து கொண்டவர் தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் பிறக்க போகும் பெண்ணுக்கு ஒரு விழாவே கொண்டாடினார்.
அதனை பார்த்து கருவில் இருக்கும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினத்தை அறிவது சட்டப்படி குற்றமென்று பலர் இவருக்கு எதிராக விமர்சனம் செய்த நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்து மன்னிப்பும் கெட்டார்.
தற்போது இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது சமையல் கலையையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே அறிவித்தபடி பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.
தன் குழந்தையின் கைவிரல்களோடு தன் கைகளை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, திடீரென்று என்னுடைய வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது என் வீட்டிற்கு இளவரசி வந்திந்திருகிறார்.
எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது நான் என்ன நல்லது பண்ணேன் தெரியவில்லை எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள் என்னுடைய மகிழ்ச்சி எல்லாம் என்னுடைய மனைவிக்கு நான் திருப்பிக் கொடுக்கப் போகிறேன் இந்த அதிசயம் எங்கள் வீட்டில் கிடைத்ததால் எங்கள் குடும்பம் வளர்ந்தது என்று கூறியிருக்கிறார். இவருக்கு ரசிகர்கலும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.