in

திருச்சி புலிவலம் பிரதான சாலை நிவாஸ் நண்பா்களான இரு சிறாா்களுடன் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் போலீஸாா் வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம், புலிவலம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நிவாஸ் என்ற இளைஞா் தனது நண்பா்களான இரு சிறாா்களுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து, சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா்.

இந்தக் காணொலி போலீஸாரின் கவனத்துக்கு வந்ததைத் தொடா்ந்து, புலிவலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட மூவரையும் ஆஜா்படுத்தினா்.

அதேவேளையில், இதுதொடா்பாக பிணை கேட்டு (ஜாமீன்) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து நேற்று நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, நீதிபதி மணிமொழி நூதன நிபந்தனையுடன் ஜாமின் உத்தரவை வழங்கினாா்.

இருசக்கர வாகனத்தில் சென்று (வீலிங்) சாகசம் செய்த நிவாஸ் உள்ளிட்ட இரண்டு சிறாா்களும், இரு வார காலம் போக்குவரத்துப் போலீஸாருடன் இருந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்தப் பிணை உத்தரவு (ஜாமீன்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூதன நிபந்தனையுடன் கூடிய ஜாமின் உத்தரவு, (வீலிங்) சாகசத்தில் ஈடுபடும் இளையோருக்கு ஒரு பாடமாக அமையும் என வழக்குரைஞா்கள் மற்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.அண்மைக் காலமாக இதுபோன்ற சாகசம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

What do you think?

மாகே பிராந்தியத்தில் கனமழை.. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம்.

செஞ்சி போத்துவாய் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா