தியேட்டர்களில் மது விற்பனையா?
புது படங்களை பார்க்க வேண்டும் என்றால் தியேட்டர்..களை தேடி செல்வது மக்கள் வழக்கம்.
ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது படம் வெளியான ஒரே மாதத்திற்குள் ஓடிடி யில் படங்கள் வெளியாவதால் மக்கள் வீட்டில் இருந்தே குறைந்த செலவில் படத்தை பார்த்து விடுகின்றனர்.
இதனால் பல தியேட்டர்கள் நஷ்டத்தில் மூழ்கி மூடும் நிலை ஏற்பட்டது .மக்களும் சிங்கிள் தியேட்டர்களுக்கு தற்போது செல்வதில்லை மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை தேர்வு செய்கின்றனர்.
இதனால் சிங்கிள் தியேட்டர்களின் நிலை மோசமாகி வருவதால் பெங்களூரில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் மது விற்பனை செய்ய அரசிடம் அனுமதி கோறியுள்ளனர்.
தியேட்டர் ஓனர்கள் வருமானத்தை அதிகரிக்க போட்ட இந்த பிளான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி உள்ளது.
மது அருந்துபவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை என்ற நிலை மாறி திரையரங்கையே மது கூடமாக மாற்றுகின்றனர், தியேட்டர்களில் மது விற்பனை செய்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று விமர்சித்து வருகின்றனர்.