குடித்து விட்டு பேசுகிறார்? ராகுல் காந்தி என்று வம்பிழுத்தஎம்பி கங்கனா ரனாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்பொழுது BJP எம்பியாக இருக்கின்றார்.
நடிகையாக இருக்கும் போது இவர் வாய் திறந்தாலே வம்பு தான்.
தற்பொழுது பாஜக கட்சியின் எம் பி ஆக கங்கனா ரனாவத், பாராளுமன்றத்தில் வழக்கம் போல வாய் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
இவர் ஏற்கனவே விவசாய போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறி குஜராத் விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர் இவரை அறைந்தார்.
ஆனால் நடிகையாக இருக்கும் பொழுதே வெளுத்து வாங்கும் கங்கனா பாராளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறாரோ என்று மக்கள் பயந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக இவர் வைத்த குற்றச்சாட்டு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அதாவது மோடியே ராகுல் காந்தி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக பல நேரங்களில் உட்கார்ந்து விடுகிறார்.
கங்கனாவோ ராகுல் காந்தி குடித்துவிட்டு கண்ட படி பேசுகிறாரா? என்று கேள்வியை எழுப்பிய நிலையில் கங்கனா கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடும் வீடியோ….வை ராகுல் தொண்டர்கள் ஷேர் செய்து கங்கணம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.