in

மருத்துவரிடம் வாங்கி கட்டி கொண்ட நயன்தாரா? முட்டாள்களுடன் வாதிடக் கூடாது பதிலடி கொடுத்த நயன்


Watch – YouTube Click

மருத்துவரிடம் வாங்கி கட்டி கொண்ட நயன்தாரா? முட்டாள்களுடன் வாதிடக் கூடாது பதிலடி கொடுத்த நயன்

அண்மையில் தவறான மருத்துவ பரிந்துரை கொடுத்து ரசிகர்களையும் மக்களையும் தவறான வழியில் நடத்துகிறார் என்று சமந்தா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் Cyriac Abby Philips புகார் அளித்துள்ளார்.

அதாவது சமந்தா ஹைட்ரஜன் பெராக்ஸைடு ..யை inhale செய்தால் வைரஸ் காய்ச்சல் குணமாகும் என்று அறிவுரை கூறினார்.

தவறான சிகிச்சயை பரிந்துரைக்கும் சமந்தா மேல் வழக்கு தொடர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார் மருத்துவர் Cyriac அதற்கான விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சமந்தா.

தற்பொழுது நயன்தாராவும் வாயை விட்டு அந்த டாக்டரிடம் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது நேற்று நயன்தாரா ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் செம்பருத்தி டீ குடித்தால் Diabetes. கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு அளிக்கும் என்றும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து டென்ஷன்…ஆன டாக்டர் நயன்தாரா என்ன டாக்டரா நோயாலிகளுக்கு எது நல்லது என்பதை தெரியாமல் தவறாக இவர்கள் வழி நடத்துகிறார்கள்.

செம்பருத்தி டீ குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று வாய்க்கு வந்ததெல்லாம் கூறுவதற்கு நீங்கள் என்ன மருத்துவரா என்று கோபத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

நயன் மருத்துவரின் பதிவிற்கு பதில் ட்வீட் போட்டிருக்கிறார், முட்டாள்களுடன் வாதிடக் கூடாது முட்டாள்கள் அவர்கள் தரத்துக்கு கீழே இழுத்துச் செல்வார்கள் பிறகு அனுபவத்தால் உங்களை தோற்கடிப்பார்கள் என்று ஒரு எழுத்தாளரின் வாசகத்தை பதிலாக கொடுத்துள்ளார் நயன்தாரா?


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்காததை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா வெளிநடப்பு

குத்தாலம் உக்தவேதிசுவரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா