வேறு மதத்தவரை திருமணம் செய்தது தவறா? பிரியாமணி
பிரியாமணி பருத்திவீரன் என்ற படத்தில் கார்த்தி…க்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியது மொழிகளில் நடித்தவர்.
அதன் பிறகு சினிமா துறையில் இருந்து காணாமல் போனவர், முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களைப் பற்றி பலர் கேலி செய்து கமெண்ட் செய்வதை பார்த்து கொதித்த பிரியாமணி நேற்று ஒரு பேட்டி அளித்துள்ளார்.
நான் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டதற்கு பல விமர்சனங்கள் எனக்கு எதிராக எழுகிறது. எனக்கு அவரை நீண்ட காலமாக தெரியும் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குடும்பத்தினரின் சம்மததுடன் திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டேன் என்று விமர்சிக்கிறார்கள்.
சினிமா துறையில் வெவ்வேறு மதத்தினர், திருமணம் செய்து கொண்டு சாதிக்கவில்லையா ஆனால் என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறார்கள்.
காதல் என்பது மொழி, மதம், பணம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார் பிரியாமணி.