வடக்குப்பட்டி ராமசாமி நகைச்சுவையா? மூடநம்பிக்கையின் வழிகாட்டியா
‘வடக்குப்பட்டி ராமசாமி’ நகைச்சுவையா? மூடநம்பிக்கையின் வழிகாட்டியா
நகைச்சுவையை எழுதுவது எப்படி கடினம் என்று காகிதத்தில் மட்டும் காட்ட கூடாது ஆனால் திரையில் சரியாக நடித்து நகைச்சுவை நடிகர்கள் பலர் கலக்குவதை பார்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில், பல நகைச்சுவைத் திரைப்படங்கள் வரிசையாக வந்து ரசிகர்களை துன்பப்படுத்தியதை பார்த்திருக்கிறோம். இதன் விளைவாக, தரமான நகைச்சுவைகள் எப்போ வரும் என்று தமிழ் சினிமா நீண்ட. நாட்களாக தவம் இருக்கிறது.
பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு ஒரு சேற்றுக் குளம் பனிக்கட்டி ஓடையாகத் தெரிவது போல் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை வெளியிட்டு குறைந்த பட்சம் பயனடைந்திருகிறார் இயக்குனர்’. எப்படியிருந்தாலும், குறைபாடுகளைப் நீக்கி மகிழ்ச்சியை மட்டும் நம்பி போனால் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் நன்றாக இரூக்கும்.
வெளிப்படையான நையாண்டியாக இல்லாவிட்டாலும், திரைப்படம் மூடநம்பிக்கை, மத வெறி, போலி கடவுள், குருட்டு நம்பிக்கை போன்ற கருப்பொருள்களை கேலி செய்கிறது, வடக்குப்பட்டி ராமசாமி . மேலும் கோவிட் சமயத்தில் மக்களின் துன்பத்தையும் அழகாக கூறியுள்ளது.
இருப்பினும், சந்தானத்தின் நையாண்டி ஒரு பகுத்தறிவுக் கண்ணோட்டத்தைக் வெளிகாடியதைவிட சுய-விமர்சனத் காட்டா தவறவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கியவர் கார்த்திக் யோகி, நாயகனாக சந்தானம், நாயகியாக மேகா, இசை ஷான் ரோல்டன்.
சிறு வயதில் பானை செய்து விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனாக வடக்குப்பட்டி ராமசாமியை காட்டுகின்றனர். ஆனால், பானையை யாருமே வாங்கவில்லை என்பதால் வறுமையில் இருந்து மீள்வதற்காக என்ன செய்யலாம் என யோசிக்கிறார், அப்போது அங்கு வந்த ஒரு திருடன் திருடி வந்த பானையை சாமி என்று மக்கள் கும்பிட, கடவுள் நம்பிக்கையே இல்லாத சந்தானம் தன் நிலத்தில் பானை இருப்பதால், அங்கையே கோவில் கட்டி பணம் சம்பாதிக்கிறார்.
மக்கள் கடவுள் பக்தியால் அதீத மூடநம்பிக்கை உடையவர்களாக அந்த கிராமத்தில் உள்ளதை அறிந்து கொண்டு அவர்களை அந்த கடவுளின் பெயரால் எப்படி ஏமாற்றி சம்பாதிக்கலாம் என பல வேலைகளை பார்த்து ஒரு கட்டத்தில் கோயில் எல்லாம் கட்டி சம்பாதித்து வருகிறார்.
அந்த கிராமத்துக்கு வரும் ஒரு பேராசை தாசில்தார் இதை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் வேளையில் இறங்குகிறார். அவரிடம் இந்த வடக்குப்பட்டி ராமசாமி சிக்கினாரா? தப்பித்தாரா? என்பது தான் கதை.
சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமியாகவே மாறிவிட்டார். சிறுத்தை படத்தில் காட்டுப்பூச்சியாக கலக்கிய சந்தானத்துக்கு பித்தலாட்டம் பண்ணுகிற கதாபாத்திரங்கள் எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி. நகைச்சுவை பெரும்பாலும் வேலை செய்கிறது என்பதை சந்தானம் நிருபித்துவிட்டார்.