in

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து செய்ய போகிறாரா?


Watch – YouTube Click

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து செய்ய போகிறாரா?

 

ரம்யா கிருஷ்ணன் 13 வயதில் தனது நடிப்பு திரை பயணத்தை தொடங்கியவர் 39 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறார்.

முதலில் இவர் தமிழில் “வெள்ளை மனசு” படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார்.

இவர் தனது முதல் படத்தில் நடிக்கும் போது 8ம் வகுப்பு படித்து வந்தார்.

என்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கனவு கனியாக இருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் கேப்டன் பிரபாகரன் படத்தின் success..இக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தவருக்கு தமிழில் சரியாக சான்ஸ் கிடைக்கவில்லை.

1989 மற்றும் 1998 க்கு இடையில் தெலுங்கு மற்றும் இந்தியில் அவர் நடித்த படங்கள் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது .

ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த பிறகு மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்தவர் இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் அம்மா கேரக்டர் ஆனாலும் சரி அம்மன் கேரக்டர் ஆனாலும் சரி பின்னி எடுத்துவிடுவார்.

1999 மற்றும் 2009 க்கு இடையில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை 2003 இல் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உண்டு இவர்கள் இருவருமே தங்களது கேரியரில் பிஸியாக இருப்பவர்கள்.

திடீரென்று ரம்யா கிருஷ்ணன் கிருஷ்ண வம்சியை விவாகரத்து செய்வதாக வலைதளத்தில் செய்திகள் உலாவியது. இதற்கு விளக்கம் அளித்த கிருஷ்ண வம்சி நான் படபிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருக்கின்றேன் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார்.

இதை வைத்து பலர் நாங்கள் இருவரும் தனித்தனியாக இருப்பதாக வதந்திகளை பரப்பு இருக்கின்றனர். எப்பொழுதுமே நாங்கள் இருவரும் எங்கள் துறையில் பிஸியாக இருப்பதால் ஒன்றாக எங்களால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது ஆனால் குடும்ப நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் ஒன்றாக செல்வோம்.

இன்று வரை நாங்கள் ஒருவரும் மேல் ஒருவர் ஆழமான அன்பு வைத்திருக்கிறோம். ரம்யா கிருஷ்ணன் மிகவும் புத்திசாலியான பெண் என்று கூறி விவாகரத்திக்கு முற்று புள்ளி வைத்தார் கிருஷ்ண வம்சி.


Watch – YouTube Click

What do you think?

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் ஐப்பசி மாத பஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

இந்திரஜாவின் ஐந்தாவது மாத வளைகாப்பு