in

மக்களை ஏமாற்றிய குடிசை மாற்று வாரியம் குற்றவாளியா மக்கள் குற்றவாளியா? பாமக பொருளாளர் திலகபாமா பேட்டி.

மக்களை ஏமாற்றிய குடிசை மாற்று வாரியம் குற்றவாளியா மக்கள் குற்றவாளியா? பாமக பொருளாளர் திலகபாமா பேட்டி.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு என கூறி நீர்வளத் துறை சார்பில் நோட்டீஸ் வெட்டப்பட்டு இடிப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன இந்நிலையில் முல்லை நகர் பகுதி மக்கள் தங்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியான பட்டா வழங்க வேண்டும் என கூறி ஏழு நாட்களாக முல்லை நகர் பகுதியில் தெருவில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஏழாவது நாளாக நடைபெறும் போராட்டத்தில் பாமக சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா பொதுமக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திலகபாமா : முல்லை நகர் பகுதி மக்கள் 600-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது இதே பகுதி என்பது மாநகராட்சி சார்பில் அனைத்து வித வரிகளும் வசூலிக்கப்பட்டுள்ளது

ஆனால் தற்பொழுது ஆக்கிரமிப்பு என கூறி இடிக்கும் முயற்சியை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்

இந்தப் பகுதியில் அரசு அனுமதியோடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் இந்த பகுதி மக்கள் பணம் செலுத்தி இடத்தை வாங்கி உள்ளனர் ஆனால் இப்போது ஆக்கிரமிப்பு என கூறுவது மக்கள் குற்றவாளிகளா? குடிசை மாற்று வாரியம் குற்றவாளியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடிசை மாற்று வாரியம் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளோம்

மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதற்கு தடுப்பதற்கான திட்டமிடல் இல்லாமல் குடியிருப்புகளை எடுப்பது தான் தீர்வு என நினைக்கிறார்கள்

இந்த பகுதி மக்கள் 60 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வரக்கூடிய நிலையில் அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்வாதாரமாக இருந்த வீடுகளை இடிப்பது என்பது கண்டனத்துக்குரியது

இந்த பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான லோன் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது

நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கூறும் பாமக தான் இதனை கூறுகிறோம் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 19.11.2024

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்