in

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார். பவர் டிரில்லர், களை எடுக்கும் கருவிகள், வைக்கோல் கட்டும் கருவிகள், சொட்டு நீர் தெளிப்பு, நீர் பாசன கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்களை கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அவுரி திடலில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார்.

இதில் பவர் ட்ரில்லர், களை எடுக்கும் கருவிகள், நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், லேசர் லெவலர்,வைக்கோல் கட்டும் கருவிகள், கைத்தெளிப்பான்,சொட்டு நீர் தெளிப்பு, நீர் பாசன கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்களை கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் விவசாயிகளுக்கு அம்முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகிய முன்னிலையில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் முறை பற்றி செயல் விளக்கம் அங்கு செய்து காட்டப்பட்டது.

What do you think?

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது

தமிழக முதல்வர் கட்சி பாகுபாடின்றி மகளிர் உரிமை தொகை தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு கிடைக்க வழிவகை செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு