வீடுகளை இடிக்க எதிர்ப்பு குழி தோண்டி ஜீவசமாதி அடையும் நூதன போராட்டம்
நித்தியானந்தாவின் கைலாசவிற்கு அனுப்பி வைக்குமாறு ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்த மக்கள்… தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் குழி தோண்டி ஜீவசமாதி அடையும் நூதன போராட்டம்…
புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் செட்டிகுளம் பகுதியில் 18 வீடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் 40 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் பணி நடைபெற உள்ளதை ஒட்டி செட்டிகுளம் பகுதியில் வசிக்கும் இந்த 18 வீடுகளை காலி செய்ய அரியாங்குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் உத்தரவு அளித்து நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் தாங்கள் வசிக்கும் பகுதியில் பின்புறம் பொறம்போக்கு இடம் உள்ளது அந்த இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என பல தரப்பட்ட முறையில் அரசுக்கு மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது…
இந்த நிலையில் தாங்கள் வசித்து வரும் மனையை காலி செய்து படகு துறைக்கு வாடகை விட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மிரட்டுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் வாழ வழியில்லாத தங்களை நித்தியானந்தா வாழும் கைலாசவிற்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மனு கொடுத்து 15 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக தங்களை உடனடியாக காலி செய்ய வேண்டுமென நில அளவை துறை சார்பில் உத்தரவு வந்திருப்பதை கண்டித்து அவர்கள் செட்டிகுளம் பகுதியில் நாகமுத்து அம்மன் கோயில் அருகே பள்ளம் தோண்டி சுற்றி மஞ்சள், சிவப்பு கொட்டி ஜீவசமாதி அடையும் நூதன போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மண்ணெண்ணெயை கண்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வலுக்கட்டாயமே அப்புறப்படுத்த காவல்துறை முயன்றால் நாங்கள் ஊற்றி தீ வைத்துக் கொள்வோம் என எச்சரிக்கையை விடுத்துள்ளார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…இனால் செட்டிகுளம் பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுணரும், மாவட்ட ஆட்சியரின் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மூன்று மணிக்கு ஜீவசமாதி அடையப்போகிற இடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…