in

விஜய் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும் அவர் குறித்து பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது

விஜய் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும் அவர் குறித்து பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினால் தான் நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என விஜய் பேசி இருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய நிலையில் நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியோ இல்லை.

இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமல் போனதற்கு விஜயும் காரணம் இல்லை அவருக்கும் எங்களுக்கும் எந்தவித சிக்கலும் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே நானும் விஜய்யும் ஒரே மேடையில் இருக்கப் போகிறோம் என சிலர் அரசியல் சாயம் பூச முயற்சித்தார்கள் அவர்கள் எந்த பின்புலத்தோடு அதை செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும் கால் நூற்றாண்டிற்கும் மேல் அரசியலில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற விவகாரங்களை யூகிக்க முடியும். விடுவார்கள் என்பதை நான் விரும்பவில்லை. அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது ஏன் ஏற்கனவே கூறிவிட்டேன்.

தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வெறும் வாய்க்கு அவள் கிடைத்தது போல ஒரு வாய்ப்பை நான் தர விரும்பவில்லை.

எனவே அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வில்லை என ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துவிட்டேன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து நான் எடுத்த முடிவு என்னுடைய சுதந்திரமான முடிவு, நல்லா இல்ல நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.

விடுதலை சிறுத்தைகள் அங்கம் வைக்கும் கூட்டணியின் நோக்கம் சிதையாமல் இருக்க வேண்டும் என தொலைநோக்கு பார்வையோடு நான் எடுத்த முடிவு. எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை திமுக இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

ஆதவ் அர்ஜுன் விசிக சார்பில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர் கூறி இருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.
சிக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் ஒவ்வொருவருக்கும் கருத்து கூற சுதந்திரம் உள்ளது.

நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்கிற வருத்தமும் ஆதங்கமும் ஆதவ் அர்ஜுனுக்கு உள்ளது சென்னை ஆற்று படுத்திக் கொள்ளும் வகையில் என்னுடைய மனசாட்சி அந்த நிகழ்ச்சியில் உள்ளது என அவர் பேசியுள்ளார்.

தாவேகா விசிக கூட்டணி அமைப்பது குறித்தான செயல்திட்டம் வகுக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனனுக்கு எண்ணம் இருக்கலாம் அது அவருடைய தனிப்பட்ட எண்ணம். நாங்கள் தற்பொழுது இருக்கும் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம் என ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன் தற்பொழுதும் கூறுகிறேன்.

200 க்கும் அதிகமான தொகுதியில் திமுக வெற்றி பெறும் என நினைப்பது இறுமாப்பு என விஜய் பேசியிருப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆடல் அர்ஜுன் பேசி வருவது உண்மை கேட்கப்படும் உரிய விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன் இல்லை என்றால் கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உலகம் முழுவதும் மன்னராட்சி ஒழிந்து விட்டது. தமிழகத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் நடந்து வருகிறது.
மன்னராட்சி குறித்து மேடைக்காக ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்தை பொருட்படுத்த தேவையில்லை

What do you think?

32 ஆண்டு கால அநீதியை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

“பூம்புகார் விற்பனை நிலையம்”