ஒரே சமயத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது
வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அடுத்த மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ்,கடந்த 8.6.2020 அன்று இவருக்கும் இவர் வீட்டின் அருகாமையில் உள்ள ஆனந்தன் என்பவருக்கும் எச்சில் துப்புவதில் தகராறு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து, ஆனந்தனை சுத்தேவ் கையால் தாக்கியதாக தெரிகிறது சற்று நேரத்தில் சுக்தேவ் வீட்டு வாசலுக்கு வந்த ஆனந்தின் கூட்டாளிகள் செல்வம்,அரவிந்த்,பாலகுரு,சிவசாமி, சிவகுரு,ஆகிய ஐந்து பேர் கட்டையால் சுக்தேவை கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்தார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளும் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சுக்தேவ் 16.6.2020 அன்று உயிரிழந்தார்
இந்த வழக்கு வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் 19 சாட்சிகளை ஆஜர்படுத்தினார்.ஒரு சாட்சி கூட பிறழ்சாட்சியாக இல்லாத நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயகுமாரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மத்திய மண்டலத்தில் ஒரே சமயத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.