in

புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை


Watch – YouTube Click

புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை

 

புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை. என்ஆர் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கட்சி விழாவில் பேச்சு.

என் ஆர் காங்கிரஸ் கட்சியின் 14 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அதில் 14-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது, மகிழ்ச்சியான நாள் என்றும் மாநிலத்தை வளர்ச்சி பாதை அமைக்க கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள்.

மக்களின் ஆலோசனை, உழைப்போடு கூட்டணி கட்சியோடு ஆட்சி அமைத்து வளர்ச்சிக்காக 5-ஆண்டுகள் முழுமையாக ஆண்டு இருக்கிறோம், பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தேர்தலை சந்தித்தது போது எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்தினோம், கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை, நிர்வாகத்தை சரியான முறையில் நடத்தவில்லை என்பதை மக்கள் அறிவார்கள் அதன் காரணமாக புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டது.

என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைத்து நடத்திக்கொண்டு இருக்கிறோம், பிரதமர் உறுதுணை, ஆசியோடு மாநில வளர்ச்சிக்கு நிதியை பெற்று, கடந்த கால ஆட்சியில் சீர்கேட்டை சரி செய்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம், மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் ஒன்றாக இணைந்து அமைச்சரவையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் உதவியோடு, நிதியை பெற்று நிர்வாகத்தை சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநருடன் இணக்கமாக சூழல் இல்லாமல் நிர்வாகம் சீர்கெட்டு இருந்தது ஆனால் தற்போது அப்படி இல்லை. பழையை திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வருகிறோம். கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு எப்படி நடத்த முடியும் என கேள்வி எழுந்தது ஆனால் அரசு பொறுப்பேற்று பின்னர் மிக மோசமான இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுஎன்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கான கல்வியை சிறந்த கல்வி மற்றும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மாலையில் சிறுதானிய உணவு விரைவில் வழங்க உள்ளோம். மக்களுக்காக நலத்திட்டங்களை வழங்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகளுக்கு அறிவித்த பண்டிகை கால திட்டங்களை அவர்களது வங்கி கணக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கூறிய போது அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் குறித்த நேரத்தில் செலுத்தி வருகிறது. அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என்றும் பேசினார். அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

மேலும் பாராளுமன்ற தேர்தல் விரையில் வர உள்ளது, வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டும், கூட்டணி கட்சியை சார்ந்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், சொன்னதை செய்கின்ற அரசாக உள்ளது.

அமைச்சர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றிகொண்டிருக்கின்றனர். கட்சியை பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் …

சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமிய விருது