எங்களுக்குள் போட்டி இருக்கிறது உண்மைதான் …கமல்
தன் நண்பனின் படத்திற்கு Promote செய்வதற்காக மும்பை சென்ற ரஜினிகாந்த்தை பற்றி நெகிழ்ச்சியாக பேசிய கமல்.
இந்தியன் 2 திரைப்பட Promotion நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார் ரஜினிகாந்த்.
நன்றி கூறி மேடையில் தன்னை மறந்து தனது நண்பனை பற்றி கமல் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்ததாவது, நாங்கள் ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கின்றோம் இருவரும் இணைந்து 13 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றோம்.
ஆனால் எங்களுக்குள் என்றைக்கும்மே போட்டி இருந்ததில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம் .
எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு குருநாதர் Balachander தான்.
ரஜினிக்கும் எனக்கும் இடையே ஆரோக்கியமான போட்டிகள் இருக்கிறது.
ஆனால் எங்களுக்குள் பொறாமை இருந்தது இல்லை எங்களுடைய பாதை வேறுவேறாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் இன்றுவரை தாக்கி பேசியது கிடையாது.
இன்று வரை நாங்கள் நல்ல நண்பராக மட்டுமே இந்த துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று ரஜினி பற்றி நெகிழ்ச்சியாக கூறினார்.