in

சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு மையத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது


Watch – YouTube Click

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்ன மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை பாராளுமன்ற தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், மற்றும் ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இங்கு 16 லட்சத்து 53 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது இன்று வாக்குப் பதிவை ஓட்டி காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெற்றது பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் பின்னர் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற வாக்குச்சாவடிகளில் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு முழுவதும் சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து வரும் வாக்கு பெட்டிகளும் தனித்தனியாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்டாங் ரூமில் வைக்கப்படுகிறது அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப் பெட்டிகள் வந்துள்ள நிலையில் நெடுந்தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்து இரவு முழுவதும் வாக்கெண்ணும் மையத்திற்கு பெட்டிகள் வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல் குமாஸ்தா கொலை வழக்கில் தப்பி ஓடிய குற்றவாளி 17 நாட்கள் கழித்து கைது

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்