பெண்கள் போட்டியிடுவதற்கு திமுக தான் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது
திண்டிவனம் அடுத்த தீவனூரில் இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அமைச்சர் ஏ.வ .வேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு பெண்களுக்கு உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை திமுக அரசுதான் ஏற்படுத்திக் கொடுத்தது என்று கூறினார்..
இதனைத் தொடர்ந்து பேசிய எ.வ.வேலு சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்ப்பட்டு 19 ஆயிரம் கோடி பாதிப்பு ஏறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்க ப்பட்ட போது பிரதமர் மோடி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்று பேசிய அவர் மீண்டும் ஒரு முறை மோடி பிரதமரானால் விலை வாசி உயர்வு 3 மடங்கு உயரும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசும்போது CAA சட்டம் நிறைவேற்றப்பட்டதற்க்கு முக்கிய காரணம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக என்றும் அவர்கள் வாக்களித்ததால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் கூட்டு சேர்ந்து நாட்டை சீரழித்து விட்டனர் என்று காட்டம் தெரிவித்தார்.
இதே போன்று GST வரியை வசூலிக்கும் மத்திய அரசு அந்த நிதியை மீண்டும் மாநிலங்களுக்கு வழங்கும் போது தமிழகத்திற்க்கு குறைவாக கொடுப்பதன் மூலம் பாரபட்சம் காட்டுகின்றது என்றார்.
முன்னதாக பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்தியா கூட்டணி வேட்ப்பாளர் பாரத பிரதமராவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசை அப்புறப் படுத்த வேண்டும் என்று பேசிய அவர், ஆரணி பகுதிகளில் மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் உதய சூரியன் சின்னத்திற்க்கு வாக்கனிக்க வேண்டும் என்றார்.