in

பாபநாசத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் எனவும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை இளைஞராக வழங்க வேண்டும் எனவும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்நிலை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி கலையப்பட வேண்டும் எனவும்சிறப்பு காலமுறையில் ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் , தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் சதீஸ்ராஜா,மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய் , பாபநாசம் வட்ட தலைவர் வரதராஜன், மற்றும் ஜாக்டோ ஜியோ கூட்டுகுழு அமைப்பின் நிர்வாகிகள், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

What do you think?

வழக்கறிஞர்களையும் மனுதாரர்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி அலட்சியப்படுத்தும் சரக காவல்துறை கண்காணிப்பாளர்

திருக்குறுங்குடி ஸ்ரீதிருமலை நம்பி (மலை நம்பி) திருக்கோயில் தெப்ப உற்சவம்