சிறைவாசல் வரை அதிமுக முன்னாள் அமைச்சர் வரவேற்க அதிகமானோரை அனுமதித்தது விவகாரம் தொடர்பாக சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் – மூன்று காவலர்களுக்கு மெமோ பொறுப்பு டிஐஜி நடவடிக்கை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜூலை 31ம் தேதி நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. அதனால் அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் மற்றும் கட்சியைச் சார்ந்த வக்கீல்கள் திருச்சி மத்திய சிறை முன் திரண்டனர். சிறைத்துறை விதிமுறைப்படி, சிறை வாசலில் யாரையும் வரவேற்க அனுமதிப்பதில்லை. ஆனால் ஜாமினில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்க, 25க்கும் மேற்பட்ட வக்கீல்கள் சிறைவாசல் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விதிமுறை மீறல் குறித்து விசாரிக்குமாறு சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வரர் தயாள் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி (பொறுப்பு) பழனி விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறைத்துறை விதிமுறை மீறி வக்கீல்களை சிறை வாசலில் அனுமதித்தது தொடர்பாக அன்று பணியில் இருந்த சிறைத்துறை ஏட்டு கணேஷ் குமார் என்பவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். காளிமுத்து, சக்திவேல்,அசாரூதின் ஆகிய மூன்று காவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.