in

ஜெயின் சமூகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை உண்ணா நோன்பு

ஜெயின் சமூகத்தினரின் புனித சடங்குகள் ஒன்றான ஒன்பது நாட்கள் வெந்நீர் மட்டும் பகல் வேலையில் அருந்தி பர்வபஜூஜன விரதம் எனப்படும் உண்ணா நோன்பு மேற்கொண்ட இளைஞரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஜெயின் கோயிலுக்கு அழைத்துச் சென்று விரதத்தை முடித்து வைத்த ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறையில் பாரம்பரிய கொண்டாட்டம்

ஜெயின் சமூகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் செய்த பாவங்கள் நீங்க பகல் வேலைகளில் வெந்நீரை மட்டும் அருந்தி கடுமையான முறையில் இந்த உண்ணா நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

மூன்று நாட்கள் முதல் ஒரு மாதம் வரையில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர். எட்டு நாட்கள் நோன்பு இருந்தால் அவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று மரியாதை செலுத்துவது ஜெயின் சமூகத்தினரின் வழக்கம். மயிலாடுதுறையைச் சார்ந்த யஸ்வந்த் பாபு என்ற இளைஞர் கடந்த 31 ஆம் தேதி துவங்கி ஒன்பது நாட்கள் இந்த விரதத்தை மேற்கொண்டார். இன்று விரதத்தை பூர்த்தி செய்த யஸ்வந்த் பாபுவின் வீட்டில் இருந்து அவரை ஜெயின் சமூகத்தினர் வெள்ளை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக ஜெயின் சமூகத்தினரின் சுமதி நாத் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறப்பு தீப ஆராதனைக்கு பிறகு தண்ணீர் கொடுத்து விரதத்தை நிறைவு செய்தனர். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

What do you think?

குத்தாலத்தில் திமுக பேரூராட்சியை கண்டித்து போராட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேட்டி..