in ,

வத்திராயிருப்பில் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி


Watch – YouTube Click

வத்திராயிருப்பில் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி

 

வத்திராயிருப்பில் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளைகள் தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்று பங்கு பெற்று விளையாடிவருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைசியாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பின்பு அரசின் பல்வேறு கட்டுப்பாடு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியானது கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் வத்திராயிருப்பு தனியார் மண்டபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி தலைமையில் வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள்,மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரும் பிப்ரவரி 20 முதல் 25ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

மேலும் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளதால் வத்திராயிருப்பு பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

சிலிண்டர் வெடித்து விபத்து துரித நடவடிக்கையால் ஆபத்து தவிர்ப்பு

சாலை பாதுகாப்பு விழா தலைக்கவசம் அணிந்து வளம் வந்த காவல்துறையினர்