தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ரெட்டிபாளையம் கிராமத்தில் அருள்மிகு திரெளபதையம்மன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளன – 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சியில் அருள்மிகு திரெளபதையம்மன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு உள்ளன
400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டி துவங்கும் முன்பு வீரர்களுக்கும் – காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்
மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன
வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் -காளைகளுக்கும் உடனுக்குடன் கட்டில், மிதிவண்டி, குக்கர், பீரோ, சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.