ஜன நாயகன் OTT உரிமை … பெரும் தொகை ..இக்கு விற்பனையானது
விஜய் நடிக்கும் ஜன நாயகன், படத்தின் சமீபத்திய தகவல் என்னவென்றால், படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சம்பளம் பாக்கி காரணமாக படபிடிப்பில் தற்போது நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
2023…னில் வெளியான தெலுங்கு படமான பகவந்த் கேசரி இன் தழுவல் ஜன நாயகன் என்று கூறப்படுகிறது.
எச் வினோத் இயக்கும் ஜன நாயகன் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஜன நாயகன் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, விஜய் தனது முழு கவனத்தையும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தமிழக வெற்றிக் கழக (TVK) அரசியல் கட்சி பணியில் முழுமூச்சாகா ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் OTT உரிமையை Netflix பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது. தமிழக திரையரங்கு உரிமையை 100 கோடி ரூபாய் ..இக்கு செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ பெற்று இருக்கிறது.