ஜவ்வாது மலை அடிவாரம் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு விவசாயம் பொதுமக்கள் மகிழ்ச்சி
5 ஆண்டுகளுக்குப் பிறகு கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சுற்று வட்டார விவசாயம் பெருகும் என மலை அடிவார கிராம மக்கள் நிம்மதி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலையில் பெய்த கனமழை காரணமாக மலை அடிவாரத்தில் உள்ள மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு.
போளூர் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் செல்லக்கூடிய மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், தும்பக்காடு, நம்மாயம்பட்டு, மிதி, தானியாறு உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்த கடுமையான மழையின் காரணமாக ஜவ்வாது மலையில் இருந்து வரக்கூடிய நீரானது ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.