in

செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக.சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 -ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் அமமுக.8-ஆம் ஆண்டு வெற்றி விழா, நல திட்டங்கள் வழங்கும் விழா ஆகியவை செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி எதிரே நடைபெற்றது.

இவ்விழா மாவட்ட அம்மா பேரவை செயலர் கே.முருகன் தலைமையில் இணை செயலர் டி.பாஸ்கர், பேரவை தலைவர் ஆர்.சீனுவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அவைத்தலைவர் ஜெ.சிலார்பாஷா வரவேற்பில் நடைபெற்ற விழாவில்.மாவட்ட சிறுபான்மை பிரிவு எம்.எஸ்.சர்தார் துவக்கவுரையாற்றினார்.
அமைப்பு செயலரும் தாம்பரம் நகராட்சி முன்னாள் நகர் மன்ற தலைவருமான ம.கரிகாலன், அமைப்பு செயலர் என்.கணபதி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் எம்.டி.முத்து ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்கள்.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, முத்து லட்சுமிலோகேந்திரன், கோவிந்தன், முரளி, பொதுக்குழு உறுப்பினர்கள் அம்சா, அப்துல்ரஷீத், கருணாநிதி, முத்துகுமார், மகேந்திரன், ராமமூர்த்தி, கணேசன், பழனிவேல், சிவா, இளங்கோவன், தமிழரசன், ஜெகதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமுமுக அமைப்பு செயலாளரும் தாம்பரம் நகராட்சி முன்னாள் நகர மன்ற தலைவருமான கரிகாலன் பேசுகையில் இந்தியாவில் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக விளங்கியது அதிமுக,கட்சி தலைவர்களில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இப்பொழுது அதிமுக கட்சி இரட்டை இலை சின்னம் நாங்கள் தான் என்று கூறிவரும் எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு மறைமுக கள்ள உறவு வைத்திருப்பதாகவும், ஏனென்றால் கொடைநாடு கொள்ளை கொலை வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு மதிப்பிற்குரிய தமிழக முதல்வரிடம் மறைமுக உறவை வைத்திருப்பதாகவும், அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களில் கொடை நாடு கொள்ளை கொலை, ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்வோம் என்று கூறிய மதிப்பிற்கு தமிழக முதல்வர் பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது யார் குற்றவாளி என்று தமிழக பொது மக்களுக்கு தெரிய வரும் நிலையில் தமிழக முதல்வருக்கும்,தமிழக காவல்துறைக்கும் யார் குற்றவாளி என்று தெரியாதா…ஏனென்றால் அவர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மறைமுக கூட்டணி வைத்து அதிமுக வை அடகு வைத்து விட்டார் என்று பேசினார் …

விழாவின் முடிவில் செஞ்சி நகர செயலர் இ.இளங்கோ நன்றி கூறினார்.

What do you think?

STR படத்திற்கு இசை அமைக்க மறுத்த அனிருத்

ஏழுமலையான் கோவிலுக்கு அபிஷேகம். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்