in

யோகி பாபுவை வைத்து படம் இயக்கும் ஜெயம் ரவி

யோகி பாபுவை வைத்து படம் இயக்கும் ஜெயம் ரவி

 

ஜெயம் ரவியின் பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், அடங்கா மறு, கோமாளி மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர்களை கொடுத்த ரவியின் சைரன் படம் நேர்மறையான விமர்சனங்களைத் தந்தது ரசிகர்கள், எப்போதாவது ஒரு படத்தை இயக்கும் திட்டம் இருக்கிறதா என்று கேட்கும்போது, “உண்மையில் ஒருநாள் படம் இயக்குவேன் என்று கூறுவார்.

அப்படியானால், உங்களிடம் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதா? “என்ற கேள்விக்கு என்னிடம் மூன்று ஸ்கிரிப்ட்கள் உள்ளன,” மூன்று திரைக்கதைகளிலும் நான் நடிக்கவில்லை”, என்னிடம் எனக்கென்று ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது.

இந்த ஸ்கிரிப்ட்டில் நடிக்கிறேன், ஏனென்றால் இந்த ஸ்கிரிப்ட்டை, இன்னொருவருக்கு எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனவே, அந்த கதைக்கு நான் சிறந்த நபராக இருப்பேன் என்று நினைக்கிறேன்.

“இரண்டாவது ஸ்கிரிப்ட்டுக்கு யோகி பாபுவை மனதில் வைத்திருக்கிறேன், மூன்றாவது கதையில் யார் வேண்டுமேணலும் நடிக்கலாம்.

தற்பொழுது எல்லா நடிகர்களும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை அமைத்து தயாரிப்பில் நடிப்பிலும் கலகுகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியும் தனது அண்ணனை போல Direction...னில் இறங்கியுள்ளர்.

இவர் ஆர்த்தியின் அம்மாவின் தயாரிப்பில் தான் பல படங்களை நடித்தார். இவருக்கும் மனைவிக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்து ஆகும் நிலையில் சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஒரு பக்கம் இருந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தன்னை எப்படி Shine செய்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்திவருகிறார். இயக்குனராக களம் இறங்கி இருக்கும் ஜெயம் ரவின் முதல் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

What do you think?

தொண்டர்களிடையே கொந்தளிப்பு… தமிழக வெற்றி கழகத்திற்கு மீண்டும் 5 நிபந்தனைகள்

சாலையை சீரமைத்து போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு கோரிக்கை