ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி… பிரிய மனம்மில்லாமல் பிரிகிறேன்
ஜெயம் ரவியின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் அவரது ரசிகர்களுக்கு கசப்பான செய்தியை ஜெயம் ரவி நேற்று வெளிட்டார்.
தனது அண்ணன் ராஜா…வின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி.
அதன்பிறகு பல படங்களில் நடித்த முன்னணி கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு அண்மை காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கல்லூரியில் படிக்கும்போது காதலித்தவர் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்து சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் இருவரும் அது குறித்து மௌனம் சாதித்தனர். திடிரென்று நேற்று ஜெயம் ரவி எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்தார்.
வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். என்னுடைய பயணத்தில் திரைப்படங்கள் வாயிலாகவும் திரை இல்லாத இடங்களில் நேர்மையாக வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் என் நெஞ்சம் நொந்து போய் ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களிடம் பகிர வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.
நீண்ட காலமாக யோசனை செய்து பல பரிசீலன்களுக்கு பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்று முடிவெடுத்து இருக்கிறேன்.
என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு இது எனது உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படி அனைவரையும்’ கேட்டுக்கொள்கிறேன்.
இது எனது சொந்த முடிவு. ஆனால் முன்பு போல நான் எப்போதும் எனது நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பது எனது கடமை நான் எப்பொழுதுமே உங்கள் ஜெயம் ரவி ஆகவே இருக்க விரும்புகிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கும் நன்றி என்று பதிவிட்டார்.
ஆனால் ஜெயம் ரவின் இந்த அறிக்கை குறித்து ஆர்த்தி மௌனமாகவே இருக்கிறார். மேலும் இன்ஸ்டாவில் ஆர்த்தி ரவி என்ற பெயரிலேயே Account வைத்திருக்கிறார். Married to Ravi என்ற வாசகத்தையும் இன்னும் அகற்றவில்லை.
மேலும் ஒரு பேட்டியில் நல்ல கணவர் என்ற அடிப்படையில் உங்கள் கணவருக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுபீர்கள் என்று ஆர்த்தியிடம் கேட்டதற்கு 100 …மேல் கொடுப்பேன் என்று கூறினார். ரசிகர்கள் சிலர் இந்த வீடியோ…வை Viral ஆக்கி ஆர்த்திக்கு ரவியை பிரிய மனம் இல்லை என்று Comments செய்து வருகிறனர்..