in

ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் தடைமண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் பேட்டி

ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் தடைமண்டலமாக அறிவிக்க வேண்டும், விளைநிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாகதொடர வேண்டும் என்பதை பாதுகாப்பட்ட வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் பேட்டி.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகார் முதல் தஞ்சை வரை பரப்புரை பயணம் தொடங்கி இன்று தஞ்சை வந்தடைந்தது. பேரணியின்
போது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக நீடிக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஒட்டுமொத்தமாக என்னை எரிவாயு குழாய்களை கணக்கெடுத்து 27 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக்கூடிய கிணறுகளை மூட வேண்டும்.

புதிய கிணறுகளை அனுமதிக்காதது போலவே பழைய கிணறுகளை மூட வேண்டும். ஆவணங்களே இல்லாமல் பல கிணறுகள் செயல்பட்டு கொண்டுள்ளது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆக்க வேண்டும். தற்போது இருக்கக்கூடிய நான்கு மாவட்டங்கள் 5 வட்டங்கள் என்பதை மாற்றி எட்டு மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

மொத்த காவிரி படுகையும் இருக்க வேண்டும். ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் தடைமண்டலமாக இருக்க வேண்டும், விலை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாகவே தொடர வேண்டும் என்பதை பாதுகாப்பட்ட வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் தெரிவித்தார்.

What do you think?

யாரை வேண்டுமானாலும் அமைச்சராகி கொள்ளட்டும் மக்களுக்கு எந்த அளவிற்கு பயன் அளிக்கிறது என்பதுதான் மிக முக்கியம் என நெல்லை முபாரக் தஞ்சாவூரில் பேட்டி.

கும்பகோணத்தில் புஸ்ஸி ஆனந்துடன் பெண் வாக்குவாதம்…..