in

காரைக்காலில் உயிர் நீத்த ஏசு பிரானுக்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபாடு

காரைக்காலில் உயிர் நீத்த ஏசு பிரானுக்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபாடு

 

காரைக்காலில் உயிர் நீத்த ஏசு பிரானுக்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிருஸ்துவர்கள் பங்கேற்பு.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் உயிர் நீத்த ஏசு பிரானுக்கு மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபடும் நிகழ்ச்சி நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான கிருஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு திருப்பலியினை பங்குதந்தை பால்ராஜ் குமார் மற்றும் உதவி பங்கு தந்தை சாமிநாதன் செல்வம் செய்தனர். பின்னர் ஏசு பிரான் சொரூபத்தை கிறிஸ்தவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது அவர்களும் முத்தமிட்டனர்.

அதைத்தொடர்ந்து ஏசு பிரானின் பெரிய சொரூபத்தை வைத்து இருந்தனர். அச் சொரூபத்திற்க்கு கிறிஸ்தவ பெருமக்கள் மரிக்கொழுந்து வைத்து வணங்கி சென்றனர்.

அவர்களுக்கு இயேசு பிரானின் சொரூபத்திற்க்கு வைக்கப்பட்ட மரிக்கொழுந்தை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் நாளை நள்ளிரவு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது.

What do you think?

காரைக்காலில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை வழிபாடு 

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தில் புனித வெள்ளி நிகழ்வு