நடிகை சீதா வீட்டில் நகை மாயம்
நடிகர் பார்த்திபனின் முன்னால் மனைவியான நடிகை சீதா பார்த்திபனை பிரிந்த பிறகு சீரியல் நடிகர் சதீஷ்..ஐ திருமணம் செய்தவர் அந்த திருமணமும் சரி வராததால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர்.
தற்பொழுது விரும்பம் பக்கத்தில் உள்ள புஷ்பா காலணியில் தனியாக வசித்து வருகிறார். நடிகை சீதா Youtube சேனலில் தனது மாடித்தோட்டம் பற்றியும் சமையல்கள் குறித்தும் அடிக்கடி வீடியோ வெளியிடுவார். தற்போது தனது வீட்டில் நகை காணாமல் போனதாக விரும்பம்பாக்க போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அலமாரியில் வைத்திருக்கும் எல்லா நகைகளும் அப்படியே இருக்க 2 ½ சவரன் ஜெமிக்கியை மட்டும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் கூறிபிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்த்திபன் தனது அலுவலகத்தில் இருந்து 12 சவரன் நகை காணவில்லை என்று அங்கிருக்கும் வேலை ஆட்கள் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.