பொது விவாதத்தின் போது தூங்கிய ஜோ பைடன் / Jo Biden Reaction during Public Debate
நேற்று மாலை வர்ஜீனியாவின் மெக்லீனில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய திரு ஜோ பைடன், டோனல்ட் டிரம்பிற்கு எதிரான விவாதம் சரியாக நடக்கவில்லை என்று ஒப்புக்கொண்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் மிகவும் சோர்வான நிலையிலேயே கலந்து கொண்டார். தனது தரப்பு விவாதத்தை சரியாக வெளிபடுத்தாதற்கு எனது பயண களைப்பு தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
“எனக்கு அன்றைய இரவு சிறப்பானதாக அமையவில்லை, ஆனாலும் உண்மை என்னவென்றால் நான் மிகுந்த புத்தி கூர்மையுடையவனும் அல்ல” என்று திரு ஜோ பைடன் கூறினார்.
இவ்விவாத நிகழ்ச்சியின் எதிரொலியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 2024 மறுதேர்தல் பற்றி பெரும் கேள்விகனைளை எதிர்கொண்டு வருகிறார்
எனது விவாத நேரத்திற்கு முன்பு நான் 100 நேர மண்டலங்களை கடந்து இந்த உலகம் முழுதும் இரண்டு முறை பயணம் செய்ய முடிவு செய்திருந்தேன். அதன் பிறகு எனது ஊழியர்களின் பேச்சையும் கேட்காமல் மேடை ஏறி கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன்” என்று அவர் கூறினார்.
இது என் தரப்பு விளக்கமே தவிர, இதன் மூலம் நான் மன்னிப்பு கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திரு பிடென் ஜூன் மாதம் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டார். இத்தாலியின் பாரிசில் உள்ள ஏழு குழு உச்சி மாநாட்டிலிருந்து ஜூன் 15 அன்று இரவே லாஸ் ஏஞ்சல்ஸில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் நிதி சேகரிப்பில் கலந்து கொண்டார். அடுத்த நாள் வாஷிங்டனுக்கு திரும்பினார்.
பின்னர் அவர் ஜூன் 27 ஆம் தேதி விவாதத்திற்கு தயாராக ஆறு நாட்கள் கேம்ப் டேவிட்டில் செலவிட்டார்.
திரு பைடன் உதவியாளர்களின் கூற்றுப்படி, மாலை 4 மணிக்குப் பிறகு தான் திரு பைடன் சோர்வடைந்தார் என்று தெரிவித்தனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது நிகழ்வுகள் உறுதிப்படுத்த பட்டிருந்தது என்று அமெரிக்க செய்தி வலைத்தளமான ஆக்சியோஸ் கடந்த வாரம் தெரிவித்தது.
விவாதத்தைத் தொடர்ந்து செவ்வாயன்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு, திரு பிடென் தனது மறுதேர்தல் முயற்சியை கைவிடுவது நன்று என்று மூன்றில் ஒரு ஜனநாயகக் கட்சியினர் கருதுகிறது.
இரண்டு நாள் கருத்துக் கணிப்பில், 78 வயதான டிரம்ப் மற்றும் 81 வயதான திரு பிடென் இருவரும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 40 சதவீத ஆதரவைப் பேணுகிறார்கள், விவாதத்திற்குப் பிறகும் திரு பைடன் இடத்தை இழக்கவில்லை.