கடும் கோபத்தில் ஜோதிகா
கங்குவா படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா எக்ஸ் தலத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் சூர்யாவின் மனைவியாக இல்லாமல் சினிமா விரும்பியாக பகிர்கின்றேன், சினிமாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சூர்யாவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
கங்குவா படத்தில் அரை மணி நேரம் இரைச்சலாக இருக்கிறது உண்மை தான் அரை மணி நேரம் என்பது பெரிய விஷயம் அல்ல பல இந்திய படங்களில் குறைபாடுகள் இருக்கின்றன. நிஜத்தில் கங்குவா மிகச்சிறந்த சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன் தமிழ் சினிமாவில் நான் இப்படி ஒரு ஒளிப்பதிவை பார்த்ததில்லை மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களுக்கு எதிரான இரட்டை அர்த்த வசனங்கள் இருந்திருக்கின்றன .ஆனால் கங்குவாவில் பெண்களின் வீரத்தை அழகாக சொல்லி இருக்கிறார்கள் சமூக வலைத்தளத்தில் கங்குவாவுக்கு எதிராக பல விமர்சனங்கள் வருவதை பார்த்து ஆச்சரியமாகவும் வேதனையாகவே இருக்கிறது.
விமர்சனம் செய்தவர்கள் படத்தில் இருக்கும் நல்ல விஷயத்தை மறந்து விட்டனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்கும் 3d அனுபவத்திற்கும் பாராட்டு’ கிடைக்க வேண்டிய நிலையில் பலர் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுபவர்கள் .சினிமா வளர்ச்சியில் எதையும் செய்யாதவர்கள் என்று கூறியுள்ளார்.