in

கலை மாமணி திரைப்படநடிகர் பாடகர் டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா


Watch – YouTube Click

கலை மாமணி திரைப்படநடிகர் பாடகர் டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா

 

மதுரை வாடிப்பட்டி பிரபல இயல்இசை நாடக சக்கரவர்த்தி கலை மாமணிதிரைப்பட நடிகர் பாடகர் டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா

பிரபல பின்னணி பாடகி பத்மபூஷன் பத்மஸ்ரீ பி சுசீலா குத்து விளக்கு ஏற்ற நாதஸ்வர இசையுடன் தொடங்கியது. நடிகர்கள் நாசர் செந்தில் சந்தான பாரதி ராஜேஷ் நடிகை சச்சு உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டிஆர்எம் சுகுமார் பவனத்தில் நடைபெற்றது விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.

இன்று காலை பிரபல பின்னணி பாடகி பத்மபூஷன் மெல்லிசை அரசி இசைக் குயில் கலைமாமணி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார் இதைத் தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வளையப்பட்டி சுப்பிரமணியன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது டி ஆர் மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் மார்பளவு சிலைதிறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி கே கோபாலன் தலைமை தாங்கினார் நடிகர் சங்க தலைவர் நாசர் திரைப்பட பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ் முருகன் தமிழக அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தலைவர் திரைப்பட நடிகர் ராஜேஷ் நகைச்சுவை நடிகர் செந்தில் நடிகர் இயக்குனர் சந்தான பாரதி நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் டி ஆர் மகாலிங்கம் பேரன் டி ஆர் எம் எஸ் ராஜேஷ் மகாலிங்கம் டி ஆர் வித்யா ஆகியோர் வரவேற்றனர் நடிகர் சங்கத் தலைவர் நாசர் டி ஆர் மகாலிங்கத்தின் திருவுருவ சிலையை திறந்து வைத்து அவருடைய கலை சிறப்பு பற்றி பேசினார்.

அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது இன்றுமாலை தென்கரையில் அமைந்துள்ள இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி ஆர் எம் எஸ் சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து கலைமாமணி நாட்டிய திலகம் வெண்ணிறைஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாடலுக்கு நடனமாட உள்ளார் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் நடிகைகள் இசை கலைஞர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர் டி ஆர் மகாலிங்கத்தின் பேரன்கள் ஸ்ரீஹரி ஆர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நன்றி கூறினர்.


Watch – YouTube Click

What do you think?

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு நாளை தொடங்கப்பட உள்ளது

திறந்த வெளி சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்