in

கழனிவாசல் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கழனிவாசல் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கழனிவாசல் கிராமத்தில் ஏழாம் ஆண்டு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக கடலாழி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார காவடிகள் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்

பின்னர் கோவில் தீக்குண்டம் எதிரே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திரௌபதி அம்மன் எழுந்தருள பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏறாளமானோர் மனு அளித்தனர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலத்தில் பெண் பக்தர்கள் ஜால்ரா மற்றும் கோலாட்டத்துடன் நடனமாடி கிரிவலம்