கஸ்தூரி..க்கு களி Confirm
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்ட கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கைதுக்கு பயந்து தலைமறைவான கஸ்தூரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இவரின் மனுவை பார்த்த நீதிபதி, மனுதாரர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை மனுதாரரின் பேச்சு கேட்பவர்களிடம் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டை போல் இருக்கிறது. பேச்சாளர் எப்பொழுதும் மேடையிலும் சமூக ஊடகங்களிலும் பேசுவதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும் பேச்சு சுதந்திரம் உண்டு ஆனால் பெரும் பொறுப்பும் பொது நலமும் கொண்ட ஒருவர் பேசிய வார்த்தைகள் இழிவானது.
எனவே மனுதாரரின் மனுவை நிராகரிக்கிறேன் என்று முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.