in

திருச்சுழி அருகே மினி வேன் டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்து கை முறிந்தது;

திருச்சுழி அருகே மினி வேன் டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்து கை முறிந்தது; காவல்துறையினர் அவரை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் சிறையில் அடைத்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியைச் சேர்ந்தவர் காளிக்குமார்(33). மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காளிக்குமார் மினி வேனில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்து அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் காளிக்குமார் படுகாயம் அடைந்தார்.

தாக்குதல் நடத்திய நான்கு பேரும் தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.‌ இந்த சம்பவம் தொடர்பாக திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தை லட்சுமணன்(24), அருண்குமார்(22), காளீஸ்வரன் (22)‌ மற்றும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன்(25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.‌

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக போலீசார் திருச்சுழி அருகே அம்பனேரி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களில் காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காளீஸ்வரன் கை முறிந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அவரது கையில் மாவு கட்டு போட்டனர். அதன் பின்னர் அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

What do you think?

டிஎஸ்பி மீது தாக்குதல் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே மோதல் பதட்டமான சூழல்

திருச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு விடுதியில் பாலியல் துன்புறுத்தல் – தலைமை ஆசிரியரும் ,மகனும் கைது