in ,

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சாந்தசொரூபினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சாந்தசொரூபினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

 

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சாந்தசொரூபினி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதில் அம்பாளுக்கு அனு தினமும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இதில் அன்னதினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவின் கடைசி நாள் சாந்த சொரூபினி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு நாதஸ்வர மேள தாளங்களுடன் தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பாஞ்சாலி சபதம் கட்டைக்கூத்து நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.இன்றைய விழா உபயத்தினை பெரிய கரும்பூர் ஹரிதாஸ் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் மலர்மாலைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்று சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வேட்டையன் First Single….. Update கொடுத்த அனிருத்