காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் ஆடி திருவிழா
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் 23ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை ஒட்டி 108 பால்குடம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் பால்குடம் , ஊஞ்சல் சேவை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
அவ்வகையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகாமாட்சி அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலின் 23ஆம் ஆண்டு திருவிழா இன்று தொடங்கியது.
முதல் நிகழ்வாக ஓரிக்கை பகுதி வாழ் ஸ்ரீமத் விஸ்வகர்மா சமுதாயத்தினரால் 108 பால்குடம் கட்சி பேசுறார் கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்கு ராஜ வீதி சங்கரமடம் கம்மாளர் தெரு வழியாக ஸ்ரீ ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலுக்கு மேளதாளம் முழங்க எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோயில் செயல் அலுவலர் பூவழகி, அறங்காவலர் ரவி ஆச்சாரி,ஏழுமலை ஆச்சாரி மற்றும் அறங்காவலர் நிர்வாக குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாக குங்குமப் பிரசாதங்கள் மற்றும் அன்னபிரசாதங்கள் வழங்கபட்டன.