காஞ்சிபுரம் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் ஊஞ்சல் சேவை உற்சவம்
ஆதிகாமாட்சி அவதரித்த ஐப்பசி பூரம் முன்னிட்டு காஞ்சிபுரம் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் அபிஷேகங்கள் செய்து ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆதி காமாட்சி கோவில் என அழைக்கப்படும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது.
ஐப்பசி பூரம் முன்னிட்டு ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தில் ஆதி காமாட்சி அம்மன் அவதரித்தார் இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பூரம் முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
ஆதி காமாட்சி அம்மன் அவதரித்த நாளை ஒட்டி அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பழவகைகள் மற்றும் பல்வேறு மலர்கள் என 48 வகையான பொருட்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ண பட்டாடை உடுத்தி லட்சுமி சரஸ்வதியுடன் ஊஞ்சல் சேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
காலை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.