காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா, திரு சந்தனக்கூடு உற்சவ திருவிழா
காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா, திரு சந்தனக்கூடு உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திரளான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 638 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்து எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டு, தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அனுதினமும் அருளாசி வழங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஹஜ்ரத் காஜா சையத் ஷாஹ் ஹமீதுத்தீன் அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா எனப்படும் பெரிய காஞ்சிபுரம் செங்கழு நீரோடையில் உள்ள பெரிய காஞ்சிபுரம் தர்காவின் திரு சந்தனக்கூட உருஸ் உற்சவம் திருவிழா இன்று முதல் தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச் சந்தனக்கூடு உற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
கொடியேற்ற விழாவிற்காக ஓலிமுகமது பேட்டை பகுதியில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருக்கொடி பேண்ட் வாத்தியங்கள் மேளதாளங்கள் பட்டாசுகள் வெடிக்க ஊர்வலமாக தர்கா வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தர்காவில் திருக்கொடியை வைத்து சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு கொடிமரத்தில் குர்ஆன் மந்திரங்கள் ஓதி ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் முன்னிலையில் கொடிமரத்தில் திருக்கொடியானது ஏற்றப்பட்டது.
சந்தன குட உருஸ் உற்சவ விழாவின் முக்கிய விழாவான சந்தன குட ஊர்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை 20ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
கொடியேற்ற திருவிழாவை காண காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் தங்கள் குடும்பத்தோடு பெரிய காஞ்சிபுரம் தர்காவிற்கு வந்து கொடியேற்ற திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தி விட்டு சென்றனர்.
விழா ஏற்பாடுகளை தர்கா தர்மகத்தா முஹம்மத் இம்தியாஸ். நிர்வாகிகள் ஹாஜி முஸ்தபா மரைக்காயர். உமர் கான் .தமீம் அன்சாரி .மற்றும் பரம்பரை பண்டாரி குடும்பத்தினர் மற்றும் தர்கா பணியாளர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.