in ,

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி ஊர்வலமாக 1008 பெண்கள் பால்குட விழா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி ஊர்வலமாக 1008 பெண்கள் பால்குட விழா

20க்கும் மேற்பட்ட பம்பை குழுவினர் பம்பை வாசித்தபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பால் அபிஷேகம் செய்தனர்

உலகப் பிரசித்தி பெற்ற சக்தி பீடத்தின் முக்கிய ஸ்தலமான காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம் அதனை ஒட்டி இன்று காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 1008-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர்.

பால்குடம் ஊடகத்தில் 20க்கும் மேற்பட்ட பம்பை குழுவினர் பம்பை வாசித்தபடி, பேண்ட் வாத்தியங்கள் உடன் 1008 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்ததை வழியெங்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்து.

What do you think?

தேவகோட்டை அருள்மிகு ஶ்ரீகோதண்டராமர் திருக்கோவில் உற்சவர் கோதண்ட ராமர் கருட வாகனத்தில் திருவீதி உலா

மாமன்னர் மருது பாண்டியர்கள் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை