in ,

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதூர் மாத விரதம் துவக்கம்

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதூர் மாத விரதம் துவக்கம்

 

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதூர் மாத விரதத்தினை துவக்கினார்.

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓரிக்கையில் பகுதியில் உள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் சாதூர் மாத விரதத்தினை துவக்கினார்.

இதில் காலை சந்திரமௌலீஸ்வரர் பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து சாதூர் மாத சங்கல்பம் செய்து சாதுர்மாத விரதத்தினை துவக்கினார்.

இதனைத் தொடர்ந்து பாத பூஜை மற்றும் பிக்க்ஷா வந்தனம். செய்த பக்தர்களுக்கு ஆசி வழங்கி பிரசாதங்கள் வழங்கினார். இதில் சங்கர மட வரவேற்பு குழு நிர்வாகிகள்‌ வீராசாமி ரவி. டாக்டர் கணேஷ். ரோட்டரி மோதிலால். ராஜேஷ் ஜெயின். எம் ஜி பாபு‌. மணிகண்டன் உள்ளிட்ட பக்தர்கள் பிரசாதங்கள் சமர்ப்பித்து ஆசி பெற்றனர்.

இவ்விழா ஏற்பாடுகளை சங்கரமட ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி. மேலாளர் சுந்தரேச ஐயர். கேம்ப் மேலாளர் ஜானகிராமன் மணிமண்டபம் நிர்வாகி பொறியாளர் மணி மாமா உள்ளிட்டோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது‌. செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை சதூர் மாத விரதம் கொள்ளும் சங்கராச்சாரியார் செப்டம்பர் 18ஆம் தேதி விஸ்வரூப யாத்திரை மேற்கொண்டு விரதத்தினை நிறைவு செய்கிறார்.

What do you think?

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய 64 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம்

25 முட்டைகளுடன் கருவுற்றிருந்த பெண் நல்ல பாம்பு பலி – பொதுமக்கள் சோகம்