காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பணாமணீஸ்வரர் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் திருவள்ளூர் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காமாட்சி அம்மை உடனுறை ஸ்ரீ பணாமணீஸ்வரர் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது இதில் காலை 108 பால்குட விழா. குடை உற்சவம் மற்றும் ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன தேர் பவனி நடைபெற்றது. சிவபூதகண திருக்கைலாய வாத்தியம். மற்றும் பேண்ட் வாத்தியங்களுடனும் பல்வேறு வீதிகளில் வலம் வந்த தேர்பவனி சுமார் 2 மணி நேரம் வீதி உலா வந்து ஆலயத்திற்கு சென்றடைந்து இதனைத் தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக விஷ்வ இந்து பரிஷத் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவானந்தம் ஊர்வலத்தினை துவக்கி வைத்தார். இவ்விழா ஏற்பாடுகளை சிவனடியார்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.