முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகவும் தகப்பனுக்கு தாரக மந்திரம் கற்பித்த இடமாகவும் போற்றப்படும் சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வருகிற ஏழாம் தேதி கந்த சஷ்டி பெருவிழா சூரசம்கார நிகழ்வும் எட்டாம் தேதி தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாண உற்சவமும் ஒன்பதாம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
கந்த சஷ்டி பெருவிழாவின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரகாணக்கான பக்தர்கள் காலை முதல் வழிபாடு நடத்தி வருகின்றனர்