in ,

ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் கோவிலில்  கந்த சஷ்டி பெருவிழா

ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் கோவிலில்  கந்த சஷ்டி பெருவிழா

 

மேலூர் அருகே முருகப் பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கப்பட்ட கந்த சஷ்டி பெருவிழா.. திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் மலையில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமானின் முக்கிய விழாவாக கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

7 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி, முருகப்பெருமானின் ஆறாவது படை வீடாக போற்றப்படக்கூடிய இந்த அழகர்கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இன்று காப்பு கட்டுதலுடன் சஷ்டி விழா தொடங்கியது.

முன்னதாக, பழமுதிர் சோலைமலை முருகனுக்கு, பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனத்துடன் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, சுவாமிக்கு சஷ்டி விழாவிற்கான காப்பு கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சஷ்டி விரதம் மேற்கொள்ளும் திரளான பக்தர்கள் அரோகரா!அரோகரா! என்ற கோசத்துடன் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

தொடர்ந்து இந்த விழாவையொட்டி தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளப்பட்டு வீதி உலா நிகழ்ச்சியும், சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 07ஆம் தேதி ஆறாம் நாள் விழாவாக திருக்கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும், 08ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது.

இந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், மற்றும் திருக்கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் ஏராளமான பிற மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்களும் கலந்து கொண்டு சஷ்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உணவு அளித்த தனியார் நிறுவனம்